அடிதடியில் அதிரடியாக வெளியான ‘அகிலன்’ ட்ரைலர்…., மாஸ் காட்டிய ஜெயம் ரவி!

0
அடிதடியில் அதிரடியாக வெளியான 'அகிலன்' ட்ரைலர்...., மாஸ் காட்டிய ஜெயம் ரவி!
அடிதடியில் அதிரடியாக வெளியான 'அகிலன்' ட்ரைலர்...., மாஸ் காட்டிய ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிலன்’ திரைப்படத்தின் அதிரடி ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.

அகிலன் ட்ரைலர்

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் வில்லன் கதாப்பாத்திரத்தை, ஹீரோவாக வைத்து எடுக்கப்பட்ட அடுத்த திரைப்படம் ‘அகிலன்’. என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி, ஹரிஷ் உத்தமன், நடிகைகள் பிரியா பவானி சங்கர், தான்யா போன்றோரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், ‘அகிலன்’ திரைப்படத்திற்கான ட்ரைலர் தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. கடல் வாணிபம் மற்றும் கடற்கரையில் நடைபெறும் அனைத்து விதமான சட்ட விரோதமான வேலைகளில் ஈடுபட்டு வரும் அகிலனுக்கு, அன்பு, பாசம், சட்டம், உண்மை என்று எதுவும் தெரியாது. தனக்கு கொடுக்கும் அடிதடி வேலைகளை மட்டும் செய்து வரும் அவர் உள்நாடு முதல் வெளிநாடு வரை நடக்கும் அனைத்து விஷயங்களையும் அப்டேட் ஆக வைத்திருக்கிறார்.

கடினமான சூழ்நிலையில் இதைத்தான் செய்யணும்., கேப்டன் ரோஹித் விளக்கம்!!!

இதற்கிடையில், கடல் வழியில் நடைபெறும், மோசடி, கடத்தல், பஞ்சம், பட்டினி போன்ற விஷயங்களை பற்றியும் பேசுகிறார். மறுபக்கத்தில், அடிதடியில் ஈடுபட்டு வரும் அகிலனை என்கவுண்டர் செய்ய காவல் துறையினர் முயற்சிக்கின்றனர். இவை எல்லாவற்றையும் தாண்டி அகிலன் தப்பித்தாரா என்ற ஒன் லைன் ஸ்டோரியுடன் வெளியாகியுள்ளது ‘அகிலன்’ திரைப்படத்தின் ட்ரைலர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here