தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனம் வயது 57 ஆக உயர்வு?? முக்கிய தகவல்!!!

0
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனம் வயது 57 ஆக உயர்வு?? முக்கிய தகவல்!!!
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனம் வயது 57 ஆக உயர்வு?? முக்கிய தகவல்!!!

தமிழ்நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு முதல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்காததால் TET தகுதி தேர்வு முடித்த பலரும் காத்திருந்தனர். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் நியமனத்திற்கான வயது 40 எனவும், ஓய்வு பெறும் வயது 60 எனவும் அரசு அறிவித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பி.எட்.பட்டதாரிகள் வயது வரம்பை தளர்த்தக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டனர். இதன் பலனாக கடந்த ஆண்டு பணி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் திருத்தப்பட்டது. இதில் உடன்பாடு இல்லாததால் வயது உச்சவரம்பை 57 ஆக உயர்த்த வேண்டும் என TET தேர்வில் தேர்ச்சி பெற்ற பலரும் சென்னை அன்பழகன் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை 3 வது நாளாக தொடர்கின்றனர்.

சம்முவை மறைமுகமாக அசிங்கப்படுத்திய பிரபல நிறுவனம்.., ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்!!

மேலும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 177 ல் குறிப்பிட்ட படி TET தேர்வின் படியே பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் 2 ஆசிரியர்கள் உணவின்றி மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தகுந்த தீர்வு இதுவரை அறிவிக்காததால் பா.ம.க. தலைவர்கள் உட்பட பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்குமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here