கடைசியில அந்த நாட்டுக்கும் இந்த நிலைமையா? அதிபர் சிறைபிடிப்பு – சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டியதாக ராணுவம் அறிவிப்பு!

0

ஆப்பிரிக்க நாடான கினியாவில் அந்நாட்டின் அதிபரை சிறை பிடித்து ஆட்சியை கைப்பற்றியதாக ராணுவம் அறிவித்துள்ளது.

அதிபர் சிறைபிடிப்பு:

கடந்த சில தினங்களுக்கு முன் தலிபான் தீவிரவாத அமைப்புகளால் ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்டது.  இதனால், அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.  இதன், அதிபராக இருந்த அஷ்ரப் கனி கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக வெளியேறிய நிலையில், போர் பதற்றத்தை தவிர்க்க தாம் வெளியேறியதாக அறிவித்து இருந்தார்.  இதனால் தற்போது வரை அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இது சம்பந்தப்பட்ட பரபரப்பு தணிவதற்குள், இதே போன்ற ஒரு செயல் ஆப்பிரிக்க நாடான கினியாவில் தற்போது நடந்துள்ளது.  கினியாவின் அதிபராக இருந்தவர் அந்த நாட்டின் ராணுவ படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து, கினியாவின் ஆட்சி தங்கள் வசம் வந்துள்ளதாக கினியாவை கைப்பற்றிய ராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

இதற்கான, காரணம் குறித்து வெளியாகியுள்ள செய்தியில், அதிபரின் சர்வாதிகார மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தேவையற்ற நடவடிக்கைகளால் அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ராணுவ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் கினியாவின் கிராம மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  ஊருக்கு திரும்பிய ராணுவத்தினரை உற்சாக வரவேற்பு கொடுத்து மகிழ்வடையவும்  வைத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here