ஆப்கானில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை – ஐ. நா. குழந்தைகள் நிதியம் வேதனை!

0
ஆப்கானில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை - ஐ. நா. குழந்தைகள் நிதியம் வேதனை!
ஆப்கானில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை - ஐ. நா. குழந்தைகள் நிதியம் வேதனை!

ஆப்கான் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள குழந்தைகள் நிதியம் வேதனை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு இல்லை :

ஆப்கானிஸ்தானின் காபூல் உள்ளிட்ட அனைத்து நகரங்களையும் தாலிபான் தீவிரவாதிகள் ஆகஸ்ட் 15 அன்று கைப்பற்றியதால் அதன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அந்த நாட்டை விட்டு தானாகவே வெளியேறி அமெரிக்காவில் குடியேற உள்ளதாக தகவல் பரவி வந்தது. இதனை அடுத்து தாலிபான் அமைப்பின் மீது நம்பிக்கை அற்றவர்கள், ஆப்கான் நகரில் இருப்பதை பாதுகாப்பாக உணராதவர்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேறி வந்தனர். இதனால் தாலிபான் அமைப்பினர் காபூல் நகரின் காவலை மிகவும் பலப்படுத்தி வைத்திருந்தனர். இதனை அடுத்து, காபூல் நகரின் இரண்டு இடங்களில் குன் வெடித்து ஏராளமான அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பின் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து அங்கு போர் உருவாகும் பதற்ற நிலை நீடித்து வருகிறது.

ஆப்கானில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை - ஐ. நா. குழந்தைகள் நிதியம் வேதனை!
ஆப்கானில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை – ஐ. நா. குழந்தைகள் நிதியம் வேதனை!

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள குழந்தைகள் நிதியம் அமைப்பு இந்த பதற்ற நிலை குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளது. மேலும், இதன் ஜார்ஜ் லாரியே அர்ச்சா தனது அறிக்கையில் ஆப்கான் நாட்டில் குழந்தைகளின் பாதுகாப்பற்ற தன்மை உருவாகியுள்ளது. அவர்களின் படிப்பு மற்றும் நண்பர்கள் சார்ந்த செயல்கள் அனைத்தும் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள பதற்ற நிலையால் குழந்தைகளின் மருத்துவம் சார்ந்தவை அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கப்படும் தொற்றை தடுக்கும் தடுப்பூசிகளான டெட்டனஸ் மற்றும் போலியோ சார்ந்த அனைத்து மருத்துவ பணிகளும் தேக்கமடைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here