4 கார் நிறைய பணத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற அதிபர் அஷ்ரப் கனி…!ரஷ்ய தூதரகம் தகவல்!!!

0

தலிபான் தீவிரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே பல வருடங்களாக  ஆப்கானிஸ்தானில் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தலிபான் படைகள் நுழைந்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி வேறு நாட்டிற்கு கையில் கிடைத்த அனைத்தையும் எடுத்து கொண்டு தப்பி சென்று உள்ளார்.

கடந்த பல வருடங்களாக ஆப்கானிஸ்தானை கைப்பற்ற தலிபான் தீவிரவாதிகள் போர் படைகள் மூலம் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கிருந்த அமெரிக்கா படைகளை திரும்ப பெறப்பட்டதை அடுத்து தலிபான் தீவிரவாதிகளின் கை நன்கு ஓங்கி விட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக  ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதி தலிபான் தீவிரவாதிகள் வசம் சிக்கி விட்டது.

இதையடுத்து எக்கசக்க பகுதிகள் தலிபான் தீவிரவாதிகளுடன் அகப்பட்டதை அடுத்து நேற்று அதன்  தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்து விட்டனர். அதன் பிறகு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அந்த நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். அவர் செல்லும் போது பணத்தால் நிரப்பப்பட்ட 4 கார்கள், ஒரு ஹெலிகாப்டருடன் தப்பி சென்று உள்ளார். மேலும் ஹெலிகாப்டரில் அடைக்க முடியாத பணத்தை காபூலில் விட்டு சென்று உள்ளதாகவும் ரஷ்ய தூதரகம்  தெரிவித்து உள்ளது.

அதிபரின் நிலைமை இதுவென்றால் அங்கு வாழும் மக்கள் நிலை அதை விட கொடுமையாக உள்ளது. அதாவது நாட்டை விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என மக்கள் என வேறு நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கும் மக்கள் சொல்ல முடியாத பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தின் டயரில் சிக்கிய 3 பேர் விமானம் நாடு வானில் பறந்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்த காட்சிகளின் வீடியோ வெளியாகி நெஞ்சை பதை பதைக்க வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here