ஆஃப்கானி சிக்கன் புலாவ் – ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபி!!!

0

ரம்ஜான் அன்று சிக்கன் புலாவ் சிறிது செய்யலாம் என்று நினைத்தால், ஆஃப்கானி சிக்கன் புலாவ் செய்யுங்கள். வருகின்ற ரம்ஜான் பண்டிகைக்கு பிரியாணி செய்வது போர் என்று நினைத்தால் ஆஃப்கானிஸ்தானில் மிகவும் பிரபலமான இந்த சிக்கன் புலாவ் செய்து சுவைத்து பாருங்க!!! இந்த சிக்கன் புலாவ் வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த ஆஃப்கானி சிக்கன் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • அரிசி – 3
  • கப் சிக்கன் – 1 கிலோ
  • வெங்காயம் – 3 (நறுக்கியது)
  • தக்காளி – 3 (நறுக்கியது)
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2-3 (நறுக்கியது)
  • பூண்டு – 4-5 பல் (நறுக்கியது)
  • இஞ்சி – 1 டீஸ்பூன் (நறுக்கியது)
  • பட்டை – 2 துண்டு
  • பச்சை ஏலக்காய் – 8
  • மல்லி – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • கிராம்பு – 4
  • தண்ணீர் – 5 1/2
  • கப் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • துருவிய கேரட் – சிறிது
  • உலர் திராட்சை – சிறிது

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, மல்லி, ஏலக்காய், உப்பு மற்றும் 5 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 30 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

 

பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதப்பி, பின் அதில் சிக்கன் துண்டுகள், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் சிக்கன் வேக வைத்த நீர் மற்றும் அரிசியைக் கழுவிப் போட்டு, உப்பு சிறிது சேர்த்து, மூடி வைத்து குறைவான தீயில் சாதத்தை வேக வைக்க வேண்டும். தண்ணீர் வற்றி, சாதம் வெந்ததும், அதில் உலர் திராட்சை மற்றும் துருவிய கேரட் தூவி அலங்கரித்தால்,

ஆஃப்கானி அருமையான மற்றும் டேஸ்ட்டியான சிக்கன் புலாவ் ரெடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here