குழந்தைகளுக்கான பவுடரில் கலப்படம்.,புற்றுநோய் அபாயம் – நிறுவனத்திற்கு தடை விதித்து அரசு உத்தரவு!!

0
குழந்தைகளுக்கான பவுடரில் கலப்படம்.,புற்றுநோய் அபாயம் - நிறுவனத்திற்கு தடை விதித்து அரசு உத்தரவு!!
குழந்தைகளுக்கான பவுடரில் கலப்படம்.,புற்றுநோய் அபாயம் - நிறுவனத்திற்கு தடை விதித்து அரசு உத்தரவு!!

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரின் உற்பத்தி உரிமத்தை (லைசென்ஸ் ) ரத்து செய்து மகராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய உத்தரவு:

உலகெங்கும் 2023ஆம் ஆண்டு முதல் ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடர் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அந்த நிறுவனம் அண்மையில் அறிவித்தது. அதாவது இந்த பேபி பவுடருக்கு பதிலாக சோள மாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பேபி பவுடரில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரை பயன்படுத்தாத தாய்மார்களே இல்லை என்ற நிலை இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இருப்பினும் கடந்த சில வருடங்களாக இந்நிறுவனத்தின் பேபி பவுடரில், தரம் குறைந்து விட்டதால் புற்றுநோய் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்புக்கான லைசன்ஸை ரத்து செய்து மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், புனே மற்றும் நாசிக்கில் செயல்பட்டு வரும் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ததில், பவுடரின் மாதிரிகள் தரநிர்ணயித்துக்கு குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாகத் தயாரிப்பை நிறுத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here