இலவச வாஷிங்மிசின், வீடு தேடி ரேஷன் பொருள் – அதிமுகவின் தேர்தல் அறிக்கை!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது அதிமுக கட்சி தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மக்கள் பயன் பெறும் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

அதிமுக:

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கட்சி பெரும் கூட்டணியுடன் களமிறங்கவுள்ளது. அதன்படி அதிமுக 179 தொகுதியிலும் கூட்டணி கட்சிகளான பாமக 23, பாஜக 20, தாமாக 6 தொகுதிகளில் களமிறங்குகின்றனர். மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னணி கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி என 6 தொகுதிகளை பிரித்துள்ளது அதிமுக. தற்போது நடைபெறவுள்ள தேர்தலுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதியம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை நேற்று மாலை வெளியிட்டுள்ளது. இதனை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதில் பல திட்டங்கள் மக்களுக்கு பயன் பெரும் வகையில் இருந்தது. அதில் தெரிவித்ததாவது, நகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். மேலும் ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களின் வீட்டிற்கே நேரடியாக விநியோகிக்கப்படும். அனைத்து அரிசி அட்டை தாரர்களுக்கும் விலையில்லா சூரிய சக்தி சமையல் அடுப்பு தரப்படும்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மாணவர்கள் நலனுக்காக கல்விக்கடன் ரத்து செய்யப்படும். மேலும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் பெண்களின் பணி சுமையை குறைப்பதற்கு அரிசி அட்டை தாரர்களுக்கு வாசிங்மெஷின் வழங்கப்படும். தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும். மக்கள் பயனடையும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் உயர்வை கணிசமாக குறைக்கப்படும். பள்ளி மாணாக்கர்களுக்கு 200 மிலி பால்/ பால் பவுடர் வழங்கப்படும். இதுபோன்ற பல திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here