Wednesday, April 24, 2024

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து 7 ஆம் தேதி அறிவிப்பு – செயல்குழு கூட்டத்தில் முடிவு!!

Must Read

தமிழகத்தில் வரும் 2021 மே மாதம் நடைபெற இருக்கும் தேர்தலுக்காக முன்னணி கட்சியான அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளரை வரும் 7 ஆம் தேதி அறிவிக்க உள்ளனர்.

சட்டசபை தேர்தல்:

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. அதிமுக சார்பில் இன்று காலை 10 மணி முதல் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். முதல்வர் வேட்பாளர் குறித்து பல்வேறு கட்சி பூசல்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று பல காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த சில நாட்களுக்கு முன் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வர் வேட்பாளர் என்று அவரது ஆதரவாளர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பி வந்தனர். இதனால் கட்சியில் கோஷ்டி பூசல் உண்டானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் இன்றைய செயற்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இன்றைய கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சசிகலா குறித்தும் விவாதம்:

கட்சி தலைமையாக கருதப்படும் சசிகலா குறித்தும் விவாதம் நடைபெற்றுள்ளது. அவர் சிறையை விட்டு வெளி வரும் போது எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளரை இன்றே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வருமாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!

ஆனால், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவினை அமைத்து அவர்கள் பரிசீலிக்கும் நபரை தான் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் வரும் 7 ஆம் தேதி அன்று கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

15 தீர்மானங்கள்:

இன்று நடைபெற்ற கூட்டத்தில் முக்கியமாக 15 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக நீட் தேர்வினை ரத்து செய்தல், கொரோனா தடுப்பு பணிக்கான கூடுதல் நிதி கேட்டு கோரிக்கை, இருமொழி கொள்கைக்காக ஆதரவு, மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு கண்டனம் தெரிவித்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -