அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுப்பு!!

0

தமிழக தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்துவது போல் இன்று அதிமுக கட்சியின் இரெண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் களம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ள அதிமுக கட்சி சமீப காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இன்று வரை அந்த கட்சியில் கோஷ்டி பூசல் தீர்ந்தபாடு இல்லை என்று தான் கூறவேண்டும். நேற்று அந்த கட்சியில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக கற்களை மட்டுமே உண்டு வாழும் மனிதர் – மஹாராஷ்டிராவில் விசித்திரம்!!

இது ஒரு புறம் இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வெறும் 6 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். இதனை அடுத்து அடுத்த கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அடுத்த நாளிலேயே வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று தான் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இந்த இரெண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 171 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Tamil Nadu Election 2021: Full list of AIADMK candidates - The Financial Express

தமிழகத்தில் மொத்தமாக 234 தொகுதிகள் உள்ளன. அடுத்தடுத்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெகு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கூடுதலாக 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு இந்த முறை மறுக்கப்பட்டுள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here