சமீபகாலமாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வை அவ்வப்போது விமர்சித்து வருகிறார். இதனால் இரு கட்சி கூட்டணிகளும் தொடர்ந்து நீடிக்குமா? என பலரும் எதிர்பார்த்த நிலையில், பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் அ.தி.மு.க.வின் கூட்டணி முறிவு முடிவு வரவேற்கத்தக்கது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் கூறுகையில், “அ.தி.மு.க. தாமதமாக முடிவு எடுத்திருந்தாலும் சரியானதொரு முடிவை எடுத்துள்ளது. பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவு நிலைப்பாடு உறுதியாக இருக்குமானால் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மாணவர்களே…, அடுத்த ஜாக்பாட்டுக்கு ரெடியாகி கோங்க…, 10 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை!!