அதிதி ஆட்டத்துக்கு வந்தாச்சு Full Stop.., இனி தான் தரமான சம்பவமே இருக்கு!!

0

அதிதி சங்கருக்கு ஆப்பு வைக்கும் விதமாக புது நடிகை ஒருவர் தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ளார்.

அன்ஷு மாலிகா

விரும்மன் படத்தில் தனக்கு ஹீரோயினாக நடிக்க கிடைத்த வாய்ப்பை அதிதி சங்கர் கெட்டியாக பிடித்துக் கொண்டார். அந்தப் படத்தில் முதல் முறையாக தனது நடிப்பு திறமை மட்டுமல்லாமல், ஆட்டம், பாட்டம் என அனைத்து வித்தைகளையும் வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டை பெற்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரை போன்று முதல் படத்திலேயே இந்த அளவிற்கு பிரபலமான ஹீரோயின்கள் இதுவரை யாருமே கிடையாது. அந்த அளவிற்கு அதிதி சங்கர் தனது முதல் படத்திலேயே செம ஹிட் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நல்ல பர்பாமன்ஸ் கொடுத்ததை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படி தொடர்ந்து அதிதிக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவரின் கேரியருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புது நடிகை ஒருவர் சினிமா துறையில் களமிறங்கியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, ரோஜாவின் மகளான அன்ஷு மாலிகா தான். அவர் தற்போது விக்ரம் மகனான குரு விக்ரமுடன் இணைந்து வர்மா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மட்டும் அவர் செம பர்பாமன்ஸ் பண்ணி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிடும். இதனால் இவருக்கும் அதிதிக்கும் இனி வரும் படங்களில் பல போட்டிகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த போட்டிகள் அனைத்தையும் யார் சமாளித்து டாப் ஹீரோயின்கள் லிஸ்டில் வருவார்கள் என பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here