தமிழக அரசானது, ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினருக்கு (ST) பல்வேறு நலத்திட்ட சிறப்பு நிதி உதவிகளை வருடந்தோறும் தவறாமல் வழங்கி வருகிறது. இதில், குறிப்பாக ஆதிதிராவிடர் கல்லூரி மாணவிகள் சிரமமின்றி படிப்பதற்கு தங்கும் விடுதிகளையும் ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில், கோவை சுங்கம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவியர் தங்கும் விடுதியை பார்வையிட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கயல்விழி அவரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் ரூபாய் 100 கோடி மதிப்பில் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கான இடங்களை ஆய்வு செய்த பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, தாட்கோ வங்கி கடன் பெறுவதில் மாணவர்களை அலைக்கழிக்க கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாகனங்களுக்கான கூடுதல் GST வரி வாபஸ்? ஒன்றிய அமைச்சர் திடீர் முடிவு!!!