ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு.. பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

0
ஆதார் வாக்காளர் அட்டை இணைப்பு - பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

இந்தியாவில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மக்கள் தானாக முன் வர வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்:

எந்த நாடுகளை எடுத்து கொண்டாலும் தேர்தலின் போது பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு நபர் அதிகமான ஓட்டுக்களை போடுவது போன்ற சூழ்ச்சியும் நடக்கிறது குறிப்பிடத்தக்கது. பலருக்கு வெவ்வேறு தொகுதிகளிலும், வெவ்வேறு மாநிலங்களிலும் ஓட்டுக்கள் இருப்பதாக புகார் ஏழுந்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்கும் விதமாக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த மோசடிகள் குறைந்தபாடு இல்லை. இதனை கருத்தில் கொண்டு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க செய்தால் இந்த தவறு நடக்காது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த திட்டம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விருப்பத்தின் அடிப்படையில் படிவம் 6 பி மூலமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.

அட்ராசக்க..வாட்ஸ் அப்பில் வந்துள்ள புது அம்சம்- இனி டென்ஷன் இல்லாமல் ஈஸியா Taxi Book செய்யலாம்!

மேலும் இ சேவை மூலமாகவும் ஆதார் எண்ணை இணைக்கலாம். இந்நிலையில் அனைத்து வாக்காளர்களும் தானாக முன்வந்து ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here