
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வேலை நிமித்தமாக வெளியூரில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில் இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு 500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அதேபோன்று திருச்சியில் இருந்து மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஆகிய இடங்களுக்கு இடங்களுக்கு 280 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய தலங்களிலும் இயக்கப்படும் பஸ்கள் தாம்பரம் அண்ணா பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அதேபோன்று தீபாவளி முடிந்த பிறகு 12, 13, 14 ,15 ஆகிய தேதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.