மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை சேர்க்க பணம் கட்டணுமா? அமைச்சர் கொடுத்த அதிரடி விளக்கம்!!

0
மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை சேர்க்க பணம் கட்டணுமா? அமைச்சர் கொடுத்த அதிரடி விளக்கம்!!
மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை சேர்க்க பணம் கட்டணுமா? அமைச்சர் கொடுத்த அதிரடி விளக்கம்!!

மின் இணைப்பு, ஆதார் எண்ணை இணைக்க தமிழகம் முழுவதும் சிறப்பு முகாமில் அதிகாரிகள் ஆதார் இணைப்புக்கு பொதுமக்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சிறப்பு முகாம்:

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து கிராம நகர்ப்புற மக்கள் அருகாமையில் உள்ள இன்டர்நெட் மையங்களில் பணம் செலவளித்து பதிவு செய்து வந்தனர். இந்த நிலையை போக்க தமிழக அரசு தமிழகத்தில் உள்ள 2,811 மின்வாரிய அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் படி இந்த முகாம்கள் பண்டிகை நாட்களை தவிர, மற்ற நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.15 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மின் வரியா துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த முகாம்களில் பணியாற்றும் அதிகாரிகள் பதிவு செய்வதற்காக பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

வாட்ஸ் அப்பை தொடர்ந்து பேஸ்புக்கிலும் மோசடி., விவரங்கள் லீக்! மெட்டாவுக்கு 276 மில்லியன் அபராதம்!!

மேலும் அதிகாரிகள் உணவு மற்றும் தேநீர் இடைவேளை என்று செல்லாமலும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், கணினி தொழில்நுட்ப கோளாறு என்ற காரணங்களால் பணிகள் தடைபட கூடாது எனவும் மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here