அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் – 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு!!

0

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக திகழ்கிறது ஃபிளிப்கார்ட் நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது அதானி குழுமத்துடன் இணைத்துள்ளது. தற்போது இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதானி மற்றும் ஃபிளிப்கார்ட்:

கடந்த 1988ம் ஆண்டு கவுதம் அதானி உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் அதானி என்டர்ப்ரைசஸ் லிமிடேட். இதன் தலைவராக தற்போது கவுதம் அதானி திகழ்கிறார். இந்நிறுவனத்தில் வேளாண் வணிகம், ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் போன்ற பல்வேறு தொழில்கள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் வருடாந்திர வருமானம் 13 பில்லியன் டாலராகும். தற்போது நாட்டில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் கொடி கட்டி பறந்து வருகிறது பிளிப்கார்ட்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நிறுவனத்தின் மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர், தற்போது வாடிக்கையாளர்களின் சேவை திறனை மேம்படுத்துவதற்காக பிளிப்கார்ட் நிறுவனம் அதானி லாஜிஸ்டிகள் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதனை அதானி குழுமம் அறிவித்தது. சில தினங்களுக்கு முன்பாக இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் தனது மூன்றாவது டேட்டா சென்டரை சென்னையில் உள்ள அதானி கோனர்ஸ் நிறுவனத்தில் நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளது.

இவரை எதுக்கு உட்கார வச்சிருக்கீங்க, இவர் இருந்த ஜெயிச்சிருக்கலாம்! ஐதராபாத் அணியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

தற்போது இந்த இரு நிறுவன இணக்கத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பயனடையும் வகையில் உட்கட்டமைப்பு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது இதன் மூலம் சுமார் 2500 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here