அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்த வழக்கு – அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

0
அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்த வழக்கு - அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்த வழக்கு - அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

அதானி குழுமம் பங்கு சந்தையில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதானி குழுமம்

அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த மாதம் குற்றம் சாட்டியது மேலும் இந்த அறிக்கையில், பங்குச்சந்தையில் அதானி குழுமம் பங்கு மதிப்பு உண்மை மதிப்பை விட அதிக அளவில் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தது. அத்துடன் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை கண்டது

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை.. 6வது சுற்று நிலவரம் – காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை!

அதன் காரணமாக, அதானி நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதுடன், அதானி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களும் நஷ்டத்தை சந்தித்தினர். இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, இந்திய பங்குச் சந்தை வாரியம் (செபி) முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் 2 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து செபி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here