வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட அதானி குழுமம்.., 100 பில்லியன் டாலர் இழப்பு.., அதலபாதாளத்திற்கு சென்ற நிறுவனம்!!!

0
வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட அதானி குழுமம்.., 100 பில்லியன் டாலர் இழப்பு.., அதலபாதாளத்திற்கு சென்ற நிறுவனம்!!!
வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட அதானி குழுமம்.., 100 பில்லியன் டாலர் இழப்பு.., அதலபாதாளத்திற்கு சென்ற நிறுவனம்!!!

கொரோனா காலகட்டங்களில் உலக பொருளாதார வளர்ச்சி சரிவில் சென்ற போதும் ஆசிய பணக்காரரான கவுதம் அதானியின் நிறுவனங்கள் சந்தையில் அபரிதமான வளர்ச்சி பெற்றது. இதனால் உலக டாப்-10 கோடீஸ்வரர் பட்டியலில் பல தொழிலதிபர்களை பின்னுக்கு தள்ளி கிடுகிடுவென 2வது இடம் வரை முன்னேறினார். ஆனால் சமீபத்தில் அதானிக்கு சொந்தமான நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் கடந்த ஜனவரி 25ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை பங்கு சந்தையில் இவருக்கு சொந்தமான 9 நிறுவனங்கள் வரலாறு காணாத சரிவை கண்டதால் அதானியின் சொத்து மதிப்பும் வீழ்ச்சி அடைந்தது. இதன் மூலம் டாப்-10 கோடீஸ்வரர் பட்டியலில் 14 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டார். இந்நிலையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தொடர்ந்து காப்பாற்ற FPO-வின் ரூ.20,000 கோடி திட்டத்தை ரத்து செய்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 5ம் தேதி டாஸ்மாக் கடையை மூட உத்தரவு.., மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!!

மேலும் அதானி குழுமத்தின் உள்நாட்டு கடன் விவரங்களை ரிசர்வ் வங்கி பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்தது. அடுத்த சில நிமிடங்களில் சர்வதேச பங்கு சந்தையில் அதானி குழுமம் 100 பில்லியன் டாலர்களை இழந்துள்ளனர். இதனால் ஆசியாவின் பணக்காரர் என்ற அந்தஸ்தையும் இழந்தார். இதே நேரத்தில் டாப்-10 கோடீஸ்வரர் பட்டியலில் 10 வது இடத்தில் இருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி 9 வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here