விபத்து ஏற்படுத்திய வழக்கு ..,யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்ட் நீக்கம்.., செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0
விபத்து ஏற்படுத்திய வழக்கு ..,யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்ட் நீக்கம்.., செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
விபத்து ஏற்படுத்திய வழக்கு ..,யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்ட் நீக்கம்.., செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து தொடர்பாக செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். அதன் பின்னர் ஒரு சில அடல்ட் காமெடி படங்களில் நடித்த அவர் சோசியல் மீடியாவிலும் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு தனது நண்பர்களுடன் காரில் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த விபத்தில் அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஒட்டிய யாஷிகாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின் தீவிர சிகிச்சையில் இருந்த யாஷிகா குணமடைந்து வர ஒருபுறம் ரசிகர்கள் யாஷிகாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் மூன்று பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. அதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும் படி யாஷிகாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

IPL 2023: மீண்டும் களமிறங்க இருக்கும் ஆஸ்திரேலிய நட்சத்திரம்…, வெளியான நியூ அப்டேட்!!

இந்த வழக்கில் யாஷிகா ஆஜராகாததால் அவருக்கு நீதிமன்றம் தற்போது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி வருகிற ஏப்ரல் 25 ம் தேதி நடைபெற இருக்கும் வழக்கில் அவர் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை யாஷிகா செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். மேலும் அடுத்த மாதம் 25ம் தேதி யாஷிகா ஆனந்த் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அவர் மீது போடப்பட்ட  பிடிவாரண்டையும் தளர்த்தியுள்ளது செங்கல்பட்டு நீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here