நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீது நடிகை விஜய லட்சுமி பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும், கல்யாணம் செய்து கொள்வதாக கூறி தட்டி கழித்து விட்டார் என்று புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் பூதாகாரமாக ஆன நிலையில் நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது கொடுக்கப்பட்ட புகாரை நேற்று நள்ளிரவில் வாபஸ் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் வழக்கை வாபஸ் பெறுவதற்கு யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
நான் கொடுத்த புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் எனக்கு காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. சீமான் சூப்பர். சீமானின் குரல் தான் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கிறது. அது ஒலித்துக்கொண்டே இருக்கட்டும். அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் ” என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
உலகை வெல்லும் இந்தியா…, கோப்பையுடன் தமிழக முதல்வர் வெளியிட்ட வைரல் பதிவு உள்ளே!!