உத்தமன் போல் பேசும் சீமான்.., மானத்தை வாங்காம விடமாட்டேன்.., கொந்தளித்த நடிகை விஜயலட்சுமி!!!

0
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கை அவரே வாபஸ் பெற்ற நிலையில் சீமான் குறித்து அவ்வப்போது பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதன் பின் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தனது மரணத்திற்கு சீமான் தான் காரணம் எனவும் பகிரங்கமாக கூறி வந்தார். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீமான் செய்யும் அயோக்கியத்தனங்களை பற்றி வழக்கு கொடுத்தாலும் தனது செல்வாக்கை பயன்படுத்தி முறியடித்து விடுகிறார்.
வெளியே பெரிய உத்தமன் போல் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார். நான் வழக்குத் தொடர்ந்து 14 வருடம் ஆகப் போகிறது. ஆனால் தற்போது வரை எனக்கு ஒரு நியாயமும் கிடைக்கவில்லை. தமிழக அரசும், காவல்துறையும் சீமானை காப்பாற்றி வருகிறது. இனியும் நான் சும்மா இருக்கப் போவதில்லை. நான் மீண்டும் சென்னைக்கு வருகிறேன். இந்த முறை போலீசிடம் எதுவும் கொஞ்சாமல் நேரடியாக மீடியா முன்பே சீமானின் மானத்தை வாங்குவேன். இனியும் நான் சீமானை விடுவதாக இல்லை என என பகிரங்கமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here