கிளாமராக நடிக்க நிறைய நடிகைகள் இருக்காங்க.., வில்லிக்கு நான் மட்டும் தான்.., பிரபல நடிகை ஓபன் டாக்!!

0
கிளாமராக நடிக்க நிறைய நடிகைகள் இருக்காங்க.., வில்லிக்கு நான் மட்டும் தான்.., பிரபல நடிகை ஓபன் டாக்!!
கிளாமராக நடிக்க நிறைய நடிகைகள் இருக்காங்க.., வில்லிக்கு நான் மட்டும் தான்.., பிரபல நடிகை ஓபன் டாக்!!

நடிகை வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிப்பதற்கு காரணம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விரிவாக பேசியுள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் :

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வில்லி அவதாரத்தில் வெளுத்து வாங்கி வருபவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். அந்த வகையில் இவர் நடித்த சர்க்கார், சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. சமீபத்தில் சமந்தா நடித்த யசோதா திரைப்படத்தில் வில்லியாக நடித்து பின்னி பெடல் எடுத்திருப்பார். மேலும் அடுத்தடுத்து சில படங்களில் வில்லியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தான் வில்லியாக நடிப்பதற்கு காரணம் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர் பேசியதாவது, திரையுலகில் கிளாமராக நடிக்க பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் வில்லியாக நடிப்பதில் நான் ஒரு ஆள் மட்டுமே தகுதியுடையவளாக இருக்கிறேன். எனக்கு அதுவே மிக சந்தோஷத்தை அளிக்கிறது. மேலும் இயக்குனர் பாலா இயக்கிய “தாரை தப்பட்டை” படத்தில் நடிக்கும் போது ஒரு காட்சியில் அடிவாங்கி வசனம் பேச வேண்டும். அப்போது எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது, அதையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொண்டிருக்கும் போது பாலா கட் சொல்ல மறந்து விட்டார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து விலகிய சஞ்சு சாம்சன்…, மாற்று வீரரை தயார்படுத்திய பிசிசிஐ!!

இருப்பினும் அந்த காட்சியை நன்றாக நடித்து கொடுத்த சந்தோசம் மட்டுமே என்னுள் இருந்தது. அதன் பிறகு தான் என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் பாலா நடந்து கொண்ட விதம், அவர் நடிப்பு சொல்லிக் கொடுத்த விதம் எனக்கு ரொம்ப பிடித்து போனதால் அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here