சைக்கோ திரில்லராக உருவான வரலட்சுமியின் சபரி திரைப்படம்.., வெளியான க்ளிம்ஸ் வீடியோ!!

0
சைக்கோ திரில்லராக உருவான வரலட்சுமியின் சபரி திரைப்படம்.., வெளியான க்ளிம்ஸ் வீடியோ!!
சைக்கோ திரில்லராக உருவான வரலட்சுமியின் சபரி திரைப்படம்.., வெளியான க்ளிம்ஸ் வீடியோ!!

தமிழ் திரையுலகில் பல படங்களில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளிவந்த யசோதா திரைப்படத்தில் வில்லியாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இதனை தொடர்ந்து அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடித்த வி3 திரைப்படம் அண்மையில் வெளியாகி பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இயக்குனர் அணில் கட்ஸ் படைப்பில் சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சபரி. இப்படத்தில் நடிகை வரலட்சுமி லீடு ரோலில் நடிக்க, வெங்கட்ராமன் மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்.., துணிவு ஸ்பெஷல் ஷோ Cut.., மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தைக் குறித்து ஒரு முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் ஒரு சில காட்சிகள் கொண்ட க்ளிம்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் . மேலும் நமக்கு பிடித்த ஒரு நபருக்காக நாம் எவ்வளவு தூரம் செல்கிறோம் என்ற தலைப்பில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here