
தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வருபவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் போடா போடி திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இதன் பிறகு வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் வில்லி கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வந்தார்.அடுத்தடுத்து பல படங்கள் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதில் உங்களுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இடையே என்ன பிரச்சனை என தொகுப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு பதில் இவர் ”நானும் ஸ்ருதியும் சிறுவயதிலிருந்து ஒரே பள்ளியில் படித்தோம் . இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் ஒரே கேங். அதே சமயம் நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமான தோழிகளும் இல்லை. ஆனால் இதுவரை எங்கள் இருவருக்கும் இடையில் எந்த மனஸ்தாபமும் ஏற்பட்டதும் இல்லை. இதுபோக இதுவரை நாங்கள் இருவரும் 2 படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம்.
இப்படி இருக்க எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை என்பது மாதிரியான பேச்சு எங்கிருந்து வந்தது என்று எனக்கே தெரியவில்லை. மேலும் பொதுவாக நான் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதோ என்னைப் பற்றிய ரூமர்களுக்கு செவி சாய்ப்பதோ கிடையாது. அதுபோக நான் இதுவரை எந்த ஒரு ரூமர்ஸ்க்கும் இடம் கொடுக்கும் அளவிற்கு நடந்து கொண்டதும் இல்லை என தன்னை பற்றியும் தனது சக நடிகையான ஸ்ருதிஹாசன் பற்றியும் இணையதளத்தில் பரவி வந்த ரூமர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வரலட்சுமி.