தளபதி 67-ல் திரிஷா நடிக்கப்போவது உறுதி? பேட்டியின் போது சூசகமாக அவரே சொன்ன அப்டேட்!!

0
தளபதி 67-ல் திரிஷா நடிக்கப்போவது உறுதி? பேட்டியின் போது சூசகமாக அவரே சொன்ன அப்டேட்!!

அண்மையில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவிடம் தளபதி 67 படத்தை குறித்து கேள்வி எழுப்பிய போது சூசகமாக பதிலளித்துள்ளார்.

நடிகை திரிஷா:

கோலிவுட்டில் கில்லி, திருப்பாச்சி போன்ற வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தான் நடிகை திரிஷா. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த எந்த திரைப்படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. குறிப்பாக 96 படத்தின் வெற்றிக்கு பின்னர் அவரின் மவுஸ் குறைந்தது. தற்போது மீண்டும் பழைய பார்முக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற செப் 30 தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் பட புரமோஷன் பணிகளும் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பட புரமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகை திரிஷாவும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் நடந்த பட புரமோஷன் நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவிடம் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ” நான் வந்திருப்பது பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சி என்பதால், இந்த படம் சம்பந்தமான கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிப்பேன்” என்று சிரித்தபடி கூறியுள்ளார். நடிகை திரிஷா இந்த கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காததால் இணையத்தில் பரவி வரும் தகவல் உண்மை என்று தெரிய வருகிறது. மேலும் இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here