அடேங்கப்பா., நம்ம த்ரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? மிரண்டுபோன இணையவாசிகள்!!
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கல்லா கட்டி உள்ளது. மேலும் இதை தொடர்ந்து இவர் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இப்படி அடுத்தடுத்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவரின் சொத்து மதிப்பு குறித்து ஒரு முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவருடைய மொத்த சொத்தின் மதிப்பையும் கூட்டினால் 83 கோடி வரை இருக்குமாம். மேலும் இவர் அடுத்தடுத்து வெற்றி படங்களை சினிமாவிற்கு கொடுத்து வரும் நிலையில் தனது சம்பளத்தை உயர்த்தி வருகிறாராம். இதனால் கூடிய விரைவில் 100 கோடி சொத்திற்கு ராணியாக திரிஷா உருவெடுத்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.