என்ன மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு ரெடி ஆகிட்டீங்க போல…! பிரேக் பாஸ்ட் பிளேட் உடன் நடிகை தமன்னா!!!

0

நடிகை தமன்னா  தொகுப்பாளினியாக ஒரு  புது அவதாரம் எடுக்க உள்ளார். தெலுங்கில் மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை  நடிகை தமன்னா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அந்த வகையில் நடிகை தமன்னா அவர்கள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் தன்னுடைய பிரேக் பிரேக் பாஸ்ட் பிளேட் உடன் உள்ளார். இந்த புகைப்படம் மூலம் அவர் அந்த நிகழ்ச்சிக்கு தயாராகிவிட்டார் என்பது போன்று உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழில் கேடி படத்தில் ஒரு அழகான வில்லியாக  வலம் வந்தவர் நடிகை தமன்னா அவர்கள். அதை தொடர்ந்து  பல படங்களில் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் காட்டில் மழை தான். அஜித், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். குடும்பப்பாங்கு மற்றும் கிளாமர் என இரண்டிலும் பட்டைய கிளப்பியவர் தமன்னா. மேலும் தமிழை தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தமன்னா புதிதாக தொகுப்பாளினியாகவும் மாற உள்ளார். அதாவது தமிழில் விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்க உள்ள மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை, தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் ஒரு கையில் காலை உணவு மற்றும் மற்றொரு கையில் ஒரு டம்ளர் உடன் உள்ளார். இந்த புகைப்படம் மூலம் அவர் மாஸ்டர் செஃப்  நிகழ்ச்சிக்கு தயாராகி விட்டார் போன்ற தோற்றத்தை வரவைக்கிறது. மேலும் இந்த புகைப்படம் பல லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here