‘இந்த படத்துல எனக்கு கண்டிப்பா அது கிடைக்கும்’ – பேட்டியில் சூசகமாக பேசிய நடிகை தமன்னா!

0
'இந்த படத்துல எனக்கு கண்டிப்பா அது கிடைக்கும்' - பேட்டியில் சூசகமாக பேசிய நடிகை தமன்னா!
'இந்த படத்துல எனக்கு கண்டிப்பா அது கிடைக்கும்' - பேட்டியில் சூசகமாக பேசிய நடிகை தமன்னா!

நடிகை தமன்னா நடிப்பில் மதூர் பண்டார்கர் இயக்கத்தில் பப்ளி பவுன்சர் ஹிந்தி படம் உருவாகி வரும் நிலையில், இப்படத்தை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

நடிகை தமன்னா:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழில் சுந்தர் சி இயக்கிய ஆக்சன் திரைப்படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி நவம்பர் ஸ்டோரி என்ற வெப் ஸ்டோரியும் அவரது நடிப்பில் வெளிவந்தது. இந்நிலையில் ஹிந்தியில் அதிகமாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

https://enewz.in/actor-cool-sureshs-life-is-now-in-my-hands-actor-simbus-promises

அந்த வகையில் அவர் நடிக்கும் புதிய ஹிந்தி திரைப்படம் பப்ளி பவுன்சர். இந்தத் திரைப்படத்தை பிரபல இயக்குனர் மதூர் பண்டார்கர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் படத்தை குறித்து சில வார்த்தைகள் பேசியுள்ளார். அதாவது மதூர் பண்டார்கர் இயக்கத்தில் பப்ளி பவுன்சர் படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்திற்கு எனக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்.

வரலாற்றில் முதல் முறையாக பெண் பவுன்சர் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. எனது சினிமா கேரியரில் இது சிறந்த படம். குறிப்பாக மதூர் பண்டார்கர் படங்களில் நடித்த ஹீரோயின்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அதே போல் எனக்கு கூட இந்த படத்திற்கு விருது வாங்க ஆசை இருக்கிறது. மேலும் விருது கிடைக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here