காதல் கன்பார்ம்.., சின்ன விஷயத்தில் சிக்கி கொண்ட தமன்னா-விஜய் வர்மா.., மாட்டிக்கிட்ட பங்கு!!

0
காதல் கன்பார்ம்.., சின்ன விஷயத்தில் சிக்கி கொண்ட தமன்னா-விஜய் வர்மா.., மாட்டிக்கிட்ட பங்கு!!
காதல் கன்பார்ம்.., சின்ன விஷயத்தில் சிக்கி கொண்ட தமன்னா-விஜய் வர்மா.., மாட்டிக்கிட்ட பங்கு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பான் இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழில் ஜெயிலர், அரண்மனை 4 உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவருடன் காதல் கிசுகிசுக்கப்படும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் அவ்வப்போது வெளியே டேட்டிங் செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் கூட இரவு நேரத்தில் ஹோட்டல் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. எனவே இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இவர்கள் இருவரும் இது குறித்து வாயை திறக்காமல் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை தமன்னா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் படு ஆக்ட்டிவாக இருந்து வரும் நிலையில் வித்தியாச வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி அதை அவரது இணையதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஆத்தாடி., காதல் கொண்டேன் பட ஆதியா இது? ஆள் அடையாளமே தெரியாம, மாறி போய்ட்டாரே!!

அந்த வகையில் கிராப் டாப்பில் உடை அணிந்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட கொஞ்சம் நேரத்தில் 2.30k லைக்ஸ் வந்தது. குறிப்பாக அந்த போட்டோவுக்கு விஜய் வர்மாவும் லைக் போட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது இருவரும் காதலிப்பது கன்பார்ம் தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here