ஜெ.., இந்திரா காந்தியை தொடர்ந்து நடிகை ஜமுனா பயோபிக் உருவாகிறது?.., ஹீரோயினாக நடிக்க போகும் முக்கிய பிரபலம்!!

0
ஜெ.., இந்திரா காந்தியை தொடர்ந்து நடிகை ஜமுனா பயோபிக் உருவாகிறது?.., ஹீரோயினாக நடிக்க போகும் முக்கிய பிரபலம்!!
ஜெ.., இந்திரா காந்தியை தொடர்ந்து நடிகை ஜமுனா பயோபிக் உருவாகிறது?.., ஹீரோயினாக நடிக்க போகும் முக்கிய பிரபலம்!!

சமீபத்தில் மறைந்த நடிகை ஜமுனா அவர்களின் பயோ பிக் கதையை படமாக எடுக்க இருப்பதாகவும், அதற்கு பிரபல முன்னணி நடிகை நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஜமுனா:

கிராமப்புற திருவிழாவில் நடக்கும் நாடகத்தில் தனது நடிப்பை தொடங்கியவர் தான் பழம்பெரும் நடிகை ஜமுனா. அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் தடம் பதித்த இவர், தமிழ், ஹிந்தி என போன்ற மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது பீக்கில் இருந்த சிவாஜி, எம் ஜி ஆர் போன்ற நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து அரசியலில் குதித்து மக்களுக்காக செயல்பட்டு வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குறிப்பாக கடந்த 1980களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர் , 1989ம் ஆண்டு ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, அவர் அரசியலில் இருந்து விலகினாலும் 1990 களில் பாரதிய ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வயது மூப்பு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இந்த நிலையில் இவரை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மாவின் ஆணி வேர் வெண்பாயே கழட்டிவிட்டு சீரியல் குழு.., கடைசில கிளைமாக்ஸ் இப்படி ஆகிடுச்சே!!

அதாவது நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக் படமாக எடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை தமிழ் இயக்குனர் இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜமுனா கேரக்டரில் நடிகை தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here