
நடிகை டாப்ஸி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் டயட்டீஷியனுக்கு கொடுக்கும் சம்பளம் குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை டாப்ஸி:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை டாப்ஸி. தமிழில் இவர் நடித்த ஆடுகளம், காஞ்சனா, கேம் ஓவர் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட் பக்கம் பிசியாக நடித்து வருகிறார் டாப்ஸி. இது ஒருபக்கம் இருக்க தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் டயட்டீஷியனுக்கு கொடுக்கும் சம்பளம் குறித்து பேசியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது அவர் பேசியதாவது, நான் இப்போதெல்லாம் கமர்ஷியல் படங்களில் நடிப்பதை அறவே விட்டுவிட்டேன். தற்போது ஹீரோயினுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் படங்களில் தான் நடித்து வருகிறேன். அப்படி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் என்னுடைய உடலை நான் கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
எனவே என்னுடைய உடல் மற்றும் உணவு பராமரிப்பிற்காக தனியாக ஒரு டயட்டீஷியனை வைத்து அவருக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தை என் அப்பாவிடம் சொன்ன போது, டயட்டீஷியனுக்கு மாசம் இவ்வளவா கொடுக்கிற அதிர்ச்சி அடைந்தார். பின் வாழ்க்கையில் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனைக்கு செலவு செய்வதை விட, இப்போ டயட்டீஷியனுக்கு சம்பளம் கொடுக்கிறது எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார்.