காணாமல் போன சுனைனா., தீவிர விசாரணையில் போலீசார்., திடுக்கிடும் தகவலால் போலீசார் அதிர்ச்சி!!

0
காணாமல் போன சுனைனா., தீவிர விசாரணையில் போலீசார்., திடுக்கிடும் தகவலால் போலீசார் அதிர்ச்சி!!

கோலிவுட் திரையில் காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் தான் நடிகை சுனைனா. இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்த நீர்ப்பறவை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றிந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுபோக கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்த ‘லத்தி’ என்ற ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இவர் டொமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகும் ‘ரெஜினா’ என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர் அண்மையில் காணாமல் போனதாக ஒரு தகவல் புகைப்படத்துடன் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கல்லூரி படிப்புக்கு மாதாந்திர உதவித்தொகை பெற கடன் அட்டை., முக்கிய தகவல்!!!

இதை உண்மை என நினைத்த போலீசார் சுனைனாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் ஷூட்டிங் சென்று வந்த நுங்கம்பாக்கம், எக்மோர் உள்ளிட்ட பல பகுதிகளில் விசாரணை செய்துள்ளனர். இதன் பிறகு தான் இந்த போஸ்டர் புதிதாக எடுக்கப்பட்டு வரும் ரெஜினா படத்தின் ப்ரோமோஷனுக்காக எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here