தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. இவர் தமிழ் மட்டுமல்லாது பல மொழியில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் பிரபல ஹீரோக்களான கமல்ஹாசன், விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் போன்றோருடன் இணைந்து நடித்து புகழின் உச்சியில் ஜொலித்து வந்தார். அந்த வகையில் இவர் இந்தியன் படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி வெள்ளி திரையில் பிசியாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சின்ன திரைக்கு என்ட்ரி கொடுத்து சீரியல்களில் நடித்து தொடங்கினார். இதனிடையில் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணமா செய்து அமெரிக்காவில் செட்டிலானார். மேலும் இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இதன் பின் திருமண வாழ்க்கையில் கணவருடன் இவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
கிறங்கடிக்கும் அழகை கியூட்டா காட்டும் அனிகா., அதை பட்டா போட துடிக்கும் இளசுகள்!!
இது குறித்து பேட்டி ஒன்றில் இவர் பேசியதாவது, ஒரு பெண்ணுக்கு அந்த திருமண வாழ்க்கை பிடிக்காத பட்சத்தில் அந்த வாழ்க்கையை கஷ்டப்பட்டு ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதனால் தான் என்னுடைய கணவரை நான் விவாகரத்து செய்தேன் என கூறியிருந்தார். இதுபோக இவர் அரசியல்வாதி ஒருவரின் பிடியில் சிக்கி தவித்ததாகவும், இதன் காரணமாக தான் இவர் மீண்டும் சினிமாவுக்குள் ரீஎன்ட்ரி கொடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.