இனிமே இந்த சீரியல் ஒளிபரப்பாகாது., கண்ணீர் விட்ட நடிகை!!

0
இனிமே இந்த சீரியல் ஒளிபரப்பாகாது., கண்ணீர் விட்ட நடிகை!!
இனிமே இந்த சீரியல் ஒளிபரப்பாகாது., கண்ணீர் விட்ட நடிகை!!

சன் டிவியில் ‘தென்றல்’ என்ற சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ். இதன் பிறகு விஜய் டிவியின் ”office” என்ற நெடுந்தொடரில் நடித்திருந்தார். இதுபோக வெள்ளி திரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை தொடர்ந்து தற்போது இவர் ‘தாலாட்டு’ என்ற சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகி 2 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஹீரோவாக நடிகர் கிருஷ்ணா நடித்து வருகிறார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கூடிய விரைவில் முடிவுக்கு வரவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களே., அகவிலைப்படி உயர்வினால் எவ்வளவு தொகை கிடைக்கும்னு தெரியுமா? வெளிவந்த அட்டவணை!!!

இந்த நேரத்தில் ஸ்ருதி தனது இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்து உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தாலாட்டு சீரியல் புதிய மைல்களை எட்டியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதுவரை எங்களுக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி. மேலும் இசைப்பிரியா கேரக்டர் முடிவுக்கு வர இருப்பது என் மனதுக்கு உணர்ச்சிகரமான தருணத்தை ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here