ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்., பெண் மீது சிபியை குற்றப்பத்திரிக்கை தாக்கல்., வெளியான முக்கிய அப்டேட்!!

0
ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்., பெண் மீது சிபியை குற்றப்பத்திரிக்கை தாக்கல்., வெளியான முக்கிய அப்டேட்!!
இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த இவர் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதன் பிறகு கடைசியாக விஜய் நடித்த ”புலி” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வந்த இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு துபாய் ஹோட்டலில் தங்கியிருந்த போது குளியலறையில் உயிரிழந்தார். அதையடுத்து இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தீப்தி ஆர்.பின்னிதி என்ற பெண்  சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தார்.
மேலும் ஸ்ரீதேவி மரணத்தில் இருக்கும் மர்மங்களை நான் கண்டுபிடித்து ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பிப்பேன் என தெரிவித்திருந்தார். இதையடுத்து வக்கீல் பாரத் சுரேஷ் என்பவருடன் இணைந்து இந்த வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டார். அதன்படி திரட்டப்பட்ட சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டனர்.  மேலும் அந்த ஆவணங்களை சிபிஐ சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டது. அதையடுத்து ஸ்ரீதேவி மரணத்தில் தீப்தி ஆர்.பின்னிதி வெளியிட்ட  ஆவணங்கள் போலியானவை என்று விசாரணையில் தெரிய வந்ததாம்.  இதன் காரணமாக  தீப்தி ஆர்.பின்னிதி  மீது சிபியை  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here