“அங்காடி தெரு” நடிகை சிந்து காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

0
"அங்காடி தெரு" நடிகை சிந்து காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

திரையுலகில் அங்காடி தெரு என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை சிந்து. இவர் சமீப காலமாக மார்பக புற்றுநோய் காரணமாக கடும் அவதிக்கு ஆளாகி வந்தார். சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த சிந்துவிற்கு சினிமா பிரபலங்கள் தாங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் கடந்த சில நாட்களாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ஒரு சோகமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது நடிகை சிந்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here