
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படத்தில் தனக்கான படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். இவர் இப்பொழுது தனது காதலர் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகருடன் மும்பையில் லிவிங்க் டூ கெதர் முறையில் வாழ்ந்து வருகிறார். இது குறித்து சில மாதங்களுக்கு முன் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வித்தியாசமான கேள்விகளை கேட்குமாறு கூறியிருந்தார்.
அதன்படி ஒரு ரசிகர், நீங்கள் மது அருந்த வேண்டும் என்றால், பியர், விஸ்கி மற்றும் காக்டெயில் இந்த மூன்று சரக்கில் எதை குடிப்பீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு ஸ்ருதிஹாசன், நான் கடந்த 6 ஆண்டுகளாக குடிப்பதை நிறுத்தி நிதானமாக வாழ்ந்து வருகிறேன். மேலும் நீங்க சொன்ன பிராண்டில் எனக்கு பிடித்தது ஏதும் இல்லை. மேலும் எப்போதாவது, ஆல்கஹால் இல்லாத பியரை குடிப்பேன் என்று நெத்தியடி பதிலை கொடுத்துள்ளார்.