தன் மகளின் பிறந்தநாளை அறிவித்த நடிகை ஸ்ரேயா – இன்ஸ்டா போஸ்ட் வைரல்!!!

0

நடிகை ஸ்ரேயா இவரின் மகளுக்கு ஒரு வயது ஆகிவிட்டதாகவும், குழந்தைக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் ஒன்று ஷேர் செய்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா:

இயக்குனர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் எனக்கு 20 உனக்கு 18. இந்த படத்தில் துணை நடிகையாக தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்ரேயா சரண். அதன் பிறகு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் சிவாஜி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து விட்டார்.

அதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை காதல் திருமணம் செய்து கொண்டார்.மேலும் நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு ஒரு படத்திலும் நடிக்காமல் தன் காதல் கணவருடன் பார்சிலோனாவில் செட்டிலாகி விட்டார். இந்த நிலையில் இவருக்கு 2021 ல் ராதா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்போது இந்த குழந்தைக்கு இன்று ஒரு வயது ஆகிவிட்டதாகவும், மேலும் தன் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி கூறி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here