ரஜினி பட நடிகைக்கு கொரோனா தொற்று – சமூகவலைத்தளத்தில் பதிவு!!

0

தளபதி படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷோபனா. தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அதை கேட்ட ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

நடிகை ஷோபனா:

இயக்குனர் எஸ். பி முத்துராமன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் எனக்குள் ஒருவன். இந்த படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷோபனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய பல மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த தளபதி படம் இன்றும் மக்களால் பேச பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சோபனா கூறியுள்ளார். மேலும் உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு ஆகிய அறிகுறிகள் இருந்ததாகவும், ஆனால் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸையும் போட்டு கொண்டதாகவும் அதனால் வைரசில் இருந்து 85 சதவிகிதம் பாதுகாப்பு பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என்றும் தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here