மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

0

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருபவர் நடிகை ஷிவானி நாராயணன். தற்போது அவர் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை கேட்ட அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நடிகை ஷிவானி நாராயணன்:

சிறுவயதில்லையே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ள நடிகை ஷிவானி நாராயணன். பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’, என்ற தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் “பகல் நிலவு” என்ற தொடரில் நாயகியாக நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் என இரண்டு நாடக தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன் ரசிகர்கள் follow செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் சீசன் 4 ரில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு தமிழ் சினிமாவில் திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. முதலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து கொண்டிருக்கும் படம் விக்ரம். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஷிவானி நாராயணன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்தன.

மேலும் இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதிதாக ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த படத்திலும் ஹீரோயினாக நடிகை ஷிவானி நாராயணன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை கேள்வி பட்ட அவரின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here