
பொதுவாக சின்னத்திரையில் அறிமுகமாகும் நடிகைகள் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுப்பது வழக்கம். அப்படி தான் நடிகை ஷிவானியும் தனது திரையுலகின் கனவை சீரியலில் இருந்து தொடங்கினார். ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்து வந்த இவர், பகல் நிலவு என்ற சீரியலில் தனது நடிப்பு திறமையை அழகாக வெளிப்படுத்தியிருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் பிறகு அடுத்தடுத்து சில நெடுந்தொடரில் நாயகியாக நடித்து அசத்தியிருந்தார். இதையடுத்து பிக் பாஸ் ஷோவில் பங்கேற்று இன்னும் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். இதற்கடுத்து தான் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. அதாவது சோசியல் மீடியாவில் தன்னுடைய கட்டழகை கவர்ச்சியாக காட்டி புகைப்படங்களை பதிவிட்டு திரையுலகின் கவனத்தைப் பெற்றார்.
மேலும் தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்து பிசியாக நடித்து வரும் இவர் தன்னுடைய நியூ கிளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் புடவை அணிந்திருக்கும் இவர் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.