குழந்தை பெற்ற பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன சாயிஷா – அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0

பெரும்பாலும் நடிகைகள் திருமணம் மற்றும் பிரசவத்துக்கு பிறகு நடிக்க வருவது இல்லை. அப்படியே வந்தாலும் உடல் எடை கூடிய காரணத்தால் அவர்களின் வாய்ப்புகள் தவிர்க்க படுகின்றனர். இந்த நிலையில் நடிகை சாயிஷா பிரசவத்தின் போது சற்று கூடியிருந்த உடல் எடையை தற்போது குறைக்கும் பணியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து உள்ளார்.

நடிகை சாயிஷா:

தெலுங்கு திரையுலகில் கலக்கி வந்த நடிகை சாயிஷா, தமிழில் ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அதன் பிறகு, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதியின் ஜுங்கா, சூர்யாவின் காப்பான் மற்றும் ஆர்யாவின் கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்தார்.

ஆர்யாவும் சாயிஷாவும் 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடித்த டெடி திரைப்படம் கொரோனா காரணமாக திரை அரங்குகள் இல்லாத காரணத்தால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆனது. இது ரசிகர்கள் பெரிதும் ரசித்து பார்த்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது சாயிஷாவுக்கு ஜூலையில் பெண் குழந்தை பிறந்து உள்ளது. அதற்கு ஆரியானா என்று பெயர் சூட்டியுள்ளனர். நடிகரும், ஆர்யாவின் நெருங்கிய நண்பருமான விஷால் இவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். மேலும் திரைப்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் ஆர்யா ஃபிட்னஸ் மீது அதிகம் ஆர்வம் உடையவர். ஒர்கவுட், சைக்கிளிங் அதிகமாக உடற்பயிற்சி செய்த வீடியோக்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இப்பொது சாயிஷாவும் ஆர்யாவின் வழியை பின்பற்றி வருகிறார். பிரசவத்திற்கு பிறகு உடல் எடை மிக அதிகமாக கூடிவிட்ட நிலையில் அதை தீவிரமாக ஒர்கவுட் செய்து குறைத்திருக்கிறார். மேலும் ஒர்க்அவுட் செய்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here