ரசிகர் போட்ட போஸ்ட்டுக்கு ரிப்லை செய்த நடிகை சமந்தா.., அவரே வெளியிட்ட எமோஷனலான பதிவு!!

0
ரசிகர் போட்ட போஸ்ட்டுக்கு ரிப்லை செய்த நடிகை சமந்தா.., அவரே வெளியிட்ட எமோஷனலான பதிவு!!
ரசிகர் போட்ட போஸ்ட்டுக்கு ரிப்லை செய்த நடிகை சமந்தா.., அவரே வெளியிட்ட எமோஷனலான பதிவு!!

நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் செய்த போஸ்ட்டுக்கு பதில் ட்வீட் செய்தது தற்போது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நடிகை சமந்தா:

தென்னிந்திய திரையுலகில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து சாகுந்தலம், குஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் சாகுந்தலம் என்ற திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுமட்டுமின்றி தளபதி நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நடிகை சமந்தாவை குறித்து ஒரு முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்டில், குரோம்பேட்டையில் உள்ள வெற்றியை தியேட்டரில் நான் கடந்து செல்லும்போது பெண்களுக்கான முன்னணி திரைப்படத்தின் பேனர்கள் இருப்பதை பார்த்தேன்.

அஜித் vs விஜய்.., யார் NO 1.., ஓப்பனாக உண்மையை உடைத்த நடிகை திரிஷா!!

தமிழ் சினிமா எவ்வளவு தூரம் வந்துவிட்டது என்று உணர்ந்தேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற ஒரு விஷயத்தை நம்மால் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த ட்விட்டிற்கு நடிகை சமந்தா, பெண்கள் எழுச்சி என்று ரீ டிவிட் செய்துள்ளார். தற்போது அந்த ட்வீட் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here