யாருமே வேணாம்.., எனக்கு இது போதும்.., கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி சம்மு செய்த காரியம்!!

0
யாருமே வேணாம்.., எனக்கு இது போதும்.., கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி சம்மு செய்த காரியம்!!
யாருமே வேணாம்.., எனக்கு இது போதும்.., கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி சம்மு செய்த காரியம்!!

கோலிவுட் திரையில் ”பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் சமந்தா ரூத் பிரபு. இதை தொடர்ந்து இவர் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உருவாக்கியுள்ளார். இப்படி திரையுலகில் வெற்றி பாதையை நோக்கி நகர்ந்து வரும் இவரது வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக ஏகப்பட்ட பிரச்சனை மற்றும் உடல் ரீதியாக சில பாதிப்புகளை சந்தித்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவருக்கு மயோசிட்டிஸ் எனப்படும் இம்யூன் நோய் இருப்பது தெரிய வந்த நிலையில், அதன் ட்ரீட்மெண்ட்காக இவரது அம்மாவுடன் ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டில் இருந்து வந்தார். இந்த நேரத்தில் இவர் அந்த நோயிலிருந்து குணமடைந்து வரும் நிலையில், இனி தனது குடுமபத்துடன் சென்னைக்கு குடியேறலாம் என முடிவெடுத்துள்ளாராம்.

நடிகை நக்மாவிடம் நேக்கா பேசி பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்.., ஒரே போனில் வங்கி பணத்தை வழித்தெடுத்த கும்பல்!!

இதுபோக சென்னை சமந்தாவின் தாயாருக்கு தாயின் சொந்த ஊர் என்பதால் அங்கு பிரம்மாண்டமான ஒரு வீட்டை சொந்தமாக வாங்கி அதை தன்னுடைய அம்மாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும் இனி ஷூட்டிங் நேரம் போக மீதமுள்ள நாட்களில் இவர் தனது குடும்பத்துடன் இந்த வீட்டில் இனி வசிக்க போவதாக கூறியுள்ளார். இவரின் இந்த செயலை அறிந்த ரசிகர்கள் தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை சமந்தாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here