இதுவரை யாருமே பார்க்காத சம்மு-நாகசைதன்யா ரொமான்டிக் பிக்ஸ்.., இணையத்தில் வைரல்!!

0
இதுவரை யாருமே பார்க்காத சம்மு-நாகசைதன்யா ரொமான்டிக் பிக்ஸ்.., இணையத்தில் வைரல்!!
இதுவரை யாருமே பார்க்காத சம்மு-நாகசைதன்யா ரொமான்டிக் பிக்ஸ்.., இணையத்தில் வைரல்!!

நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

சமந்தா – நாகசைதன்யா

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனது கவர்ச்சியின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களை சொக்கி போக வைத்தவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது. இப்படி பிசியாக நடித்து வந்த சம்மு, தெலுங்கு பிரபலம் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை 4 வருடமாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சினிமாவில் சூப்பர் கப்புள் என்ற பெயரை எடுத்து வந்த நடிகை சமந்தாக்கும் , நாகசைதன்யாவுக்கும் இடையில் ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக தங்களது 4 வருட காதல் திருமணத்தை முடித்துக்கொண்டனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதனால் இவர்கள் மீண்டும் சேரமாட்டார்களா என்று ரசிகர்கள் பல கடவுள்களை வேண்டி வருகின்றனர். இருப்பினும் அவர்கள் சேர்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்து வருகிறது. சொல்லப்போனால் சம்மு திருமணத்தின் போது நாகசைதன்யா குடும்பம் வாங்கி கொடுத்த புடவையை சமந்தா திரும்பி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லியோ படத்துல மிச்சதெல்லாம் தாண்டி நமக்கு இப்படி ஒரு ட்ரீட் இருக்கு.., படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

இதை வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக இருவரும் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் அவர்கள் காதலிக்கும் போது எடுத்த ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதற்கு பல ரசிகர்களும் இந்த பெஸ்ட் கப்புள் மீண்டும் சேர வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here