
நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்ய போவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
நடிகை சமந்தா:
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருக்கும் சம்மு, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு 4 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் இருவரும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சாமியார் சத்குரு ஜக்கி வாதேவ் சமந்தாவுக்கு இரண்டாம் திருமணம் குறித்து அட்வைஸ் செய்துள்ளார். இதனால் தற்போது சமந்தா யோசனை செய்து வருகிறாராம். கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தி சொல்வார் என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சமந்தா சைடுல இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.