ஆண்களுக்கு சளைத்தவர் இல்லை பெண்கள்…, நடிகை ரோகினி அதிரடி பேச்சு!!

0
ஆண்களுக்கு சளைத்தவர் இல்லை பெண்கள்..., நடிகை ரோகினி அதிரடி பேச்சு!!
ஆண்களுக்கு சளைத்தவர் இல்லை பெண்கள்..., நடிகை ரோகினி அதிரடி பேச்சு!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரோகினி மேடையில் பெண்களை குறித்து பேசியது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நடிகை ரோகினி

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உருவெடுத்து கிட்டத்தட்ட 130 படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ரோகிணி. இவர் பிரபல வில்லனான மறைந்த ரகுவரனின் முன்னாள் மனைவியாவார். தற்போது இவர் பிஸியாக நடித்து வந்தாலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணை தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்போது அவர் மேடையில் பேசியதாவது, இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பிடித்த படிப்பை கூட படிக்க முடியவில்லை. பெற்றோர்களே அவர்களை தடுக்கிறார்கள். இதெல்லாம் மாறவேண்டும். மகளிர் தினத்தன்று ஆடை வாங்கி கொடுத்தால் மட்டும் போதாது, வீட்டு வேலையை பாதி செய்ய வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள் ஆண்கள் வலிமையானவர் என்று தமிழ் சொல்லை வைத்து அரசியல் செய்து வருகிறார்.

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்., இனி 2 மாதங்களுக்கு மின்வெட்டு பயமில்லை? மின்வாரியத் துறை அதிரடி உத்தரவு!!!

இதில் அடக்குமுறை இருக்கிறது. எனவே பெண்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். மேலும் ஆண்கள் மானே தேனே பொன்மானே என்று அழைத்தால் உருகி விட வேண்டாம். பெண்களை சிங்க பெண்ணே என்று அழைக்க என்ன இருக்கிறது. ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்த வேண்டும் என்று நடிகை ரோகினி அதிரடியாக பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here