சிம்பிள் மேக்கப்… அலட்டிக்காத பார்வை… பிரமிப்பில் திகைக்க வைத்த ரித்துவின்  லேட்டஸ்ட் கிளிக்!!!

0

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்து வர்மா. அவ்வப்போது தனது புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்து வந்தார். அந்த வகையில்  தற்போது சிம்பிள் மேக்கப்பில் அலட்டிக்கொள்ளாத பார்வையில் கண்ணை பறிக்கும் அழகில் உள்ளார். தற்போது அந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

தெலுங்கில் குறும்படங்களில் நடித்து தனது திரை வாழ்வைத் தொடங்கியவர் நடிகை ரித்து வர்மா. அவரின் ‘அணுகொகுண்டா’ என்ற குறும்படம் தெலுங்கில் மிகுந்த வெற்றியை பெற்றது. மேலும் பல விருதுகளையும் பெற்றது. அந்த குறும்படத்தின் மூலம் பிரபலமான இவர் ‘பிரேமா இஷக் காதல்’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. அதன் பிறகு அவர் பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அதை தொடர்ந்து அவருக்கு தமிழ் மொழியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதாவது தனுஷ் அவர்களின் ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் அனிதா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பிறகு தமிழில் நாயகியாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். மேலும் அதை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகான சுடிதாரில் சிம்பிள் மேக்கப் உடன் செம கியூட்டாக காட்சி தருகிறார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் திகைப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here