என்னது.. புஷ்பா படத்தில் ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சம்பளமா? – நயன்தாராவ பீட் பண்ணிருவாங்க போலயே!!

0

சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் புஷ்பா படத்தில் ஹீரோயினாக நடித்த போது வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா:

கன்னட மொழியில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகம் ஆனவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பின்னர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து தமிழிலும் நடித்தார். இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து இருந்தார்.

புஷ்பா படம் விமர்சன ரீதியாக மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா முதல் பாகத்திற்கு மட்டும் நடிகை ராஷ்மிகா மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் நடிகை ராஷ்மிகாவும் சேர்ந்து விட்டாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here